/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் கவிழ்ந்து விபத்து; உயிர்தப்பிய பயணியர்
/
கார் கவிழ்ந்து விபத்து; உயிர்தப்பிய பயணியர்
ADDED : டிச 25, 2024 09:58 PM

வால்பாறை; வால்பாறை அருகே, அதிவேகமாக வந்த கார் ரோட்டோர தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டாபியை சேர்ந்த ஆறு இளைஞர்கள், நேற்று காலை வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.
பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு அருகே செல்லும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவர் மீது மோதி, ரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஆறு பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சம்பவ இடத்தை போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், 'வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணியர் தங்களது வாகனங்களை மித வேகத்தில் இயக்க வேண்டும். சமவெளியில் வாகனங்களை இயக்குவது போன்று மலைப்பகுதியில் இயக்கக்கூடாது. பயணம் பாதுகாப்பானதாக அமைய, சாலைவிதிகளை கடைபிடித்து விழிப்புணர்வுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என்றனர்.

