தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டு போட ரயில், பஸ்சில் முண்டியடித்த பயணிகள்

 ஓட்டு போட ரயில், பஸ்சில் முண்டியடித்த பயணிகள்

 ஓட்டு போட ரயில், பஸ்சில் முண்டியடித்த பயணிகள்


ADDED : ஏப் 22, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. தொழில் நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் தவறாது ஓட்டளிக்க ஏதுவாக இன்று ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளால் பஸ், ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. கோவையில் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் தங்கி பணிபுரிகின்றனர்.

சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பயணிகள் செல்வது அதிகரித்துள்ளது. அதேபோல், பயணிகள் வசதிக்காக டாக்டர் எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல்-போத்தனுார் இடையே நேற்றும், இன்றும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை, நாகர்கோவில், மதுரை செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் அடித்து பிடித்து ஏறினர்.

வெளியூர் செல்பவர்கள் பலர் தேர்தல் முடிந்து அடுத்த வாரம் மீண்டும் கோவை வருவதற்கு திட்டமிட்டுள்ளனர். எனவே, போக்குவரத்து வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us