/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதாகும் டிஜிட்டல் போர்டுகள் சிரமத்துக்குள்ளாகும் பயணியர்
/
பழுதாகும் டிஜிட்டல் போர்டுகள் சிரமத்துக்குள்ளாகும் பயணியர்
பழுதாகும் டிஜிட்டல் போர்டுகள் சிரமத்துக்குள்ளாகும் பயணியர்
பழுதாகும் டிஜிட்டல் போர்டுகள் சிரமத்துக்குள்ளாகும் பயணியர்
ADDED : ஜூன் 22, 2025 11:13 PM
பொள்ளாச்சி: தொலை துார அரசு பஸ்களில், அவ்வப்போது, டிஜிட்டல் போர்டுகள் பழுதாகி காணப்படுவதால், பயணியர் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
அரசு போக்குவரத்துக்கழகம், பொள்ளாச்சி கிளை 1, 2 மற்றும் 3ல் இருந்து, தினமும், 187 பஸ்கள், தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர, பழநி, திருப்பூர் என பிற கிளைகளில் இருந்து, 60 பஸ்கள், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன.
சராசரியாக, 77 ஆயிரம் பயணியர் வந்து செல்கின்றனர். இதேபோல, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, சராசரியாக, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணியர் வருகை புரிகின்றனர்.
அவ்வகையில், ஊர்களின் பெயர்களை அறிந்து கொள்ளும் வகையில், பல பஸ்களில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த டிஜிட்டல் பலகைகளின் செயல்பாடு, சில நேரங்களில், முடங்கி விடுகிறது.
சில பஸ்களில் பாதி எழுத்துக்கள் மட்டும் தெரிகின்றன. இதனால் அவசர கதியில் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணியர் பஸ்கள் மாறி ஏறிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பயணியர் கூறியதாவது:
பஸ்களில் உள்ள டிஜிட்டல் போர்டு சரிவர செயல்படுகிறதா என்பது குறித்து, கவனிக்க வேண்டும். செல்லும் ஊர் பெயர் தவறாக குறிப்பிடும் போது, அதில் ஏறி பயணிக்கும் பயணியர், சிறிது துாரம் சென்ற பின் கீழே இறங்கும் நிலை ஏற்படுகிறது. அவர்களின் சிரமத்தை தவிர்க்க டிஜிட்டல் போர்டுகளை பராமரித்து இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.