/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்ட்களில் திரண்ட பயணிகள்
/
பஸ் ஸ்டாண்ட்களில் திரண்ட பயணிகள்
ADDED : அக் 30, 2024 09:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, ;தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அதிகளவில் பொதுமக்கள் திரண்டனர். பஸ் ஸ்டாண்ட்களில் நீண்ட நேரம், காத்திருந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து குன்னுார், ஊட்டி செல்வதற்காக அதிக பயணிகள் திரண்டனர்.
இதனால், பஸ்களுக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பஸ்களை இயக்கினர். இதேபோல், கோவை சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டில், தென் மாவட்டங்களுக்கு செல்ல பயணிகள் அதிகம் திரண்டனர்.

