/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருகூரில் ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி
/
இருகூரில் ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி
இருகூரில் ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி
இருகூரில் ரயில்கள் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 23, 2025 02:42 AM
சூலுார்: இருகூர் மற்றும் சிங்காநல்லுாரில் ரயில்கள் நின்று செல்வதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'தமிழகத்தில், கூடுதலாக, 38 ஸ்டேஷன்களில் ரயில்கள் நின்று செல்லும்,' என, தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.
அந்த பட்டியலில், இருகூர் மற்றும் சிங்காநல்லுர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடம் பெற்றிருந்தன.
கடந்த, 18ம் தேதி முதல், இருகூர் மற்றும் சிங்காநல்லுர் ஸ்டேஷன்களில், திருச்சி- பாலக்காடு டவுன் விரைவு ரயில், கோவை --- நாகர்கோவில் விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெற்றுள்ளனர்.
ரயில் பயணிகள் கூறுகையில், 'ரயிலில் பயணிக்க வேண்டுமென்றால், 15 கி.மீ., தொலைவில் உள்ள, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு தான் செல்ல வேண்டி இருந்தது. தற்போது, இருகூரிலும், சிங்காநல்லுாரிலும் ரயில் நின்று செல்வதால், வசதியாக உள்ளது' என்றனர்.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ. கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சக்திவேல் கூறுகையில், ''பயணிகளின் கோரிக்கையை, மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதன் பயனாக, ரயில்கள் நின்று செல்கின்றன. நடவடிக்கை எடுத்த மத்திய அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரித்துக்கொள்கிறோம்,'' என்றார்.