/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்துமீறும் தனியார் பஸ்கள் விபத்துக்குள்ளாகும் பயணியர்
/
அத்துமீறும் தனியார் பஸ்கள் விபத்துக்குள்ளாகும் பயணியர்
அத்துமீறும் தனியார் பஸ்கள் விபத்துக்குள்ளாகும் பயணியர்
அத்துமீறும் தனியார் பஸ்கள் விபத்துக்குள்ளாகும் பயணியர்
ADDED : அக் 29, 2025 12:08 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப்பில் பெரும்பாலான தனியார் பஸ்கள், பயணியரை பஸ் ஸ்டாப்பில் முறையாக இறக்கி விடுவதில்லை.
பயணியர் இறங்குவதற்குள் அவசரமாக பஸ்சை நகர்த்துவதால், படிக்கட்டுகளில் இருந்து நிலை தடுமாறி விழுகின்றனர். இதனால் தனியார் பஸ்களில் பயணிக்க அச்சப்படுகின்றனர்.
பயணியர் கூறியதாவது:
பொள்ளாச்சி, கோவையில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பஸ்கள் விதிமீறலில் ஈடுபடுகின்றன. முறையாக பயணியரை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுவதில்லை.
பஸ் ஸ்டாப்களில் அவசர அவசரமாக பயணியரை இறக்கி விடுகின்றனர். மேலும், பயணியரிடத்தில் கடினமாக நடந்து கொள்கின்றனர்.
தனியார் பஸ்களுக்கு இடையே, அடுத்த ஸ்டாப்புக்கு யார் முதலில் செல்வது என போட்டி போட்டுக் கொண்டு பஸ்சை இயக்குகின்றனர். இதனால், பயணியர் படியில் இறங்கும் போதே பஸ்சை நகர்த்துகின்றனர். இதனால் பயணியர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் இருவர் கீழே விழும் நிலைக்குச் சென்றதால், பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது போன்று தினமும் பிரச்னை ஏற்படுகிறது.
போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மக்கள் வசதிக்காக தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்பதை தனியார் பஸ் உரிமையாளர்களும் உணர்ந்து, பஸ் ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

