/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடகோவை ரயில்வே ஸ்டேஷன் பணிகளை விரைந்து முடிக்க பயணிகள் வேண்டுகோள்
/
வடகோவை ரயில்வே ஸ்டேஷன் பணிகளை விரைந்து முடிக்க பயணிகள் வேண்டுகோள்
வடகோவை ரயில்வே ஸ்டேஷன் பணிகளை விரைந்து முடிக்க பயணிகள் வேண்டுகோள்
வடகோவை ரயில்வே ஸ்டேஷன் பணிகளை விரைந்து முடிக்க பயணிகள் வேண்டுகோள்
ADDED : ஏப் 15, 2025 11:30 PM

கோவை; வடகோவை ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிகளை, விரைந்து முடிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சந்திப்பில், ஆறு பிளாட்பாரங்கள் உள்ளன. 139 ரயில்கள் நாள்தோறும் கையாளப்படுகின்றன. இங்கு நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க,போத்தனுார் மற்றும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன்களைமேம்படுத்த, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
இதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன், ரூ.24 கோடியிலும், வடகோவை ரயில்வே ஸ்டேஷன் ரூ.15 கோடி செலவிலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில், பணிகள் விரைவாக நடந்து வரும் நிலையில், வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. பணிகள், 2024ம் ஆண்டே முடிந்திருக்க வேண்டும். இன்னும் முடியாமல் இழுக்கிறது.
வடகோவை ரயில் நிலையத்தில், இப்போது தினமும் 29 ரயில்கள் நின்று செல்கின்றன. அந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கவும்,பணிகளை விரைந்து முடிக்கவும், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஸ் கூறுகையில், ''இங்கு உயர்மட்ட மேம்பாலம், காத்திருப்பு அறை, லிப்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. 29 ரயில்கள் நின்று செல்கின்றன. மேம்பாட்டு பணிகள் முடிந்தால், மேலும் பல ரயில்களை நிறுத்த, வாய்ப்பு ஏற்படும்.
தற்போது இரண்டு பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளன. இங்கு மேலும், மூன்று பிளாட்பாரங்கள் ஏற்படுத்த வசதி உள்ளது. ரயில்வே நிர்வாகம் மேலும் ஒரு பிளாட்பாரத்தை ஏற்படுத்த ஒப்பந்தம் கோரியுள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, புதிய திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் கோவை சந்திப்பில் நெருக்கடி குறையும்,'' என்றார்.