தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்களால் பயணியர் பரிதவிப்பு

பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்களால் பயணியர் பரிதவிப்பு

பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கும் பஸ்களால் பயணியர் பரிதவிப்பு


ADDED : அக் 24, 2024 09:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 09:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, அதிகப்படியான தொலைதுார மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர் 'ஷிப்ட்' மாற்றத்தின் போது, அந்தந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் பயணியரை இறக்கி விட்டு, பணிமனைக்கு செல்ல வேண்டும்.

ஆனால், சில பஸ் டிரைவர்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்சை கொண்டு செல்வதில்லை. பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் ரோட்டில் நிறுத்தி பயணியரை இறக்கி விடுகின்றனர். இதனால், வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

பயணியர் கூறியதாவது:

டவுன் பஸ் மட்டுமின்றி, தொலைதுார பஸ்களும், சில நேரங்களில் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல், ரவுண்டானா பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால், பிற ஊர்களுக்குச் செல்லும் பயணியர், அந்த பஸ்சை பிடிப்பதற்காக, போக்குவரத்து நிறைந்த சாலையை, அவசர கதியில் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இது குறித்து, போலீசாரே கேள்வி எழுப்பினாலும், டிரைவர்கள் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். துறை ரீதியான அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு நடத்தி, அனைத்து பஸ்களையும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us