/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் அவதி
/
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் பயணியர் அவதி
ADDED : செப் 05, 2025 10:02 PM
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பிளாட்பாரம் நீளம் இல்லாததால், பயணியர் அவதி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாராந்திர ரயிலுக்கு குறைந்தது, 400க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
இதில், ரயில்வே டிராக்கில் வரும் சில ரயில்கள், பிளாட்பாரம் நீளத்தை விட பெரிதாக இருப்பதால், பிளாட்பாரத்தை தாண்டி ரயில் நிற்கிறது. இதனால் பயணியர் பலர் தண்டவாளத்தில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த பிளாட்பாரத்தை நீட்டிக்க கோரி, கருத்துரு தயார் செய்து ரயில்வே நிர்வாகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், இப்பணிகள் இன்னும் துவங்காததால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, பிளாட்பாரம் நீட்டிப்பு பணியை, ரயில்வே நிர்வாகம் சார்பில் விரைவில் துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.