/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ்களில் நெருக்கமான இருக்கைகளால் பயணியர் அவதி
/
தனியார் பஸ்களில் நெருக்கமான இருக்கைகளால் பயணியர் அவதி
தனியார் பஸ்களில் நெருக்கமான இருக்கைகளால் பயணியர் அவதி
தனியார் பஸ்களில் நெருக்கமான இருக்கைகளால் பயணியர் அவதி
ADDED : நவ 14, 2025 09:28 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி - கோவை இடையே அதிகப்படியான தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, உடுமலை, பழநியில் இருந்தும், பொள்ளாச்சி மார்க்கமாக கோவைக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணியரை கவரும் வகையில், தனியார் பஸ்களில் ஜொலிக்கும் மின்விளக்ககள், 'டிவி'யில் சினிமா, 'டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டம்,' இடம்பெற்றுள்ளன. இதனால், பயணியர் பலரும், தனியார் பஸ்களில் பயணிக்கவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சில பஸ்களில், அதிக பயணியரை ஏற்ற வசதியாக, நெருக்கமான இடைவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அகலம் குறைந்த இருக்கைகளில் அமர்ந்து, தொலைதுாரம் பயணிக்க முடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.
பயணியர் கூறுகையில், 'தனியார் பஸ்களில் அதிக எண்ணிக்கையில் பயணியர் நின்று பயணிப்பதற்கு ஏதுவாகவும் இவ்வாறு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. இதனிடையே தங்களது உடைமைகளை வைத்துக் கொண்டு, குறுகலான இடத்தில் அமர்ந்து தொலைதுாரத்துக்கு பயணிப்பது சிரமமாக உள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்,' என்றனர்.

