/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலில் காய்ந்து...மழையில் நனைந்து ரோட்டோரம் காத்திருக்கும் பயணிகள்! நிழற் குடை அமைப்பது எப்போது?
/
வெயிலில் காய்ந்து...மழையில் நனைந்து ரோட்டோரம் காத்திருக்கும் பயணிகள்! நிழற் குடை அமைப்பது எப்போது?
வெயிலில் காய்ந்து...மழையில் நனைந்து ரோட்டோரம் காத்திருக்கும் பயணிகள்! நிழற் குடை அமைப்பது எப்போது?
வெயிலில் காய்ந்து...மழையில் நனைந்து ரோட்டோரம் காத்திருக்கும் பயணிகள்! நிழற் குடை அமைப்பது எப்போது?
ADDED : டிச 09, 2025 05:09 AM

பீளமேடு: உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு கட்டியுள்ள மேம்பாலம் சமீபத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பாலம் கட்டுமானப் பணி நடந்தபோது, இவ்வழித்தடத்தில் இருந்த பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. தற்போது தேவைப்படும் ஸ்டாப்புகளில் மீண்டும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வழித்தடத்தில் 12 ஸ்டாப் உள்ளன. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நிழற்குடைகள் இருக்கின்றன. மற்ற இடங்களில் பயணிகள் ரோட்டோரத்தில் காத்திருந்து, பஸ் ஏறிச் செல்கின்றனர். வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் சிரமப்படுகின்றனர்.
அதிவேகமாக வரும் வாகனங்களால், ரோட்டோரத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு, பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதோடு, அனைத்து இடங்களிலும் நிழற்குடை அமைக்க வேண்டும். அதிக பயணிகள் பயன்படுத்தும் நிறுத்தங்களுக்கு, முன்னுரிமை கொடுத்து உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
நகர் பகுதியில், 49 இடங்களில் ரூ.3.47 கோடியில் 'ப்ரீகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுகிறது. அதில், அவிநாசி ரோடு பஸ் ஸ்டாப் தேர்வு செய்யப்படவில்லை.
மேம்பாலம் கட்டுமான பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை சிறப்பு திட்டங்கள் பிரிவினர் மேற்கொண்டனர். அத்துறையினரே நிழற்குடைகளை மீண்டும் அமைத்துத் தர வேண்டும் அல்லது முன்னுரிமை அடிப்படையில், மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு, பீளமேடு பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி ஸ்டாப்பை, தினமும் ஆயிரக்கணக்கான மாணவியர் மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனைக்குச் செல்லும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
நிழற்குடை இல்லாததால், மில் முன்புள்ள மரத்தின் கீழ் நிற்கின்றனர். மழை பெய்தால் ஒதுங்கி நிற்கக் கூட இடமில்லை. அவசர அவசியம் கருதி, இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

