/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாஸ்போர்ட் சேவை மையம் வேண்டும்! எம்.பி.,யிடம் பா.ஜ., வலியுறுத்தல்
/
பாஸ்போர்ட் சேவை மையம் வேண்டும்! எம்.பி.,யிடம் பா.ஜ., வலியுறுத்தல்
பாஸ்போர்ட் சேவை மையம் வேண்டும்! எம்.பி.,யிடம் பா.ஜ., வலியுறுத்தல்
பாஸ்போர்ட் சேவை மையம் வேண்டும்! எம்.பி.,யிடம் பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : ஜன 21, 2024 11:22 PM

பொள்ளாச்சி:'பொள்ளாச்சியில், பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க வேண்டும்,' என, நகர பா.ஜ.,வினர், உத்தரபிரதேச ராஜ்யசபா எம்.பி.,யிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
உத்தரபிரதேச முன்னாள் துணை முதல்வரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தினேஷ் சர்மாவிடம், பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் சேவை மையம் (அனைத்து சேவை மற்றும் வசதிகளுடன்) அமைக்க வேண்டும். மத்திய அரசின், 'பாரத் மாலா பரியோஜன திட்டத்தின்' கீழ் நடக்கும் பொள்ளாச்சி -- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகளை வேகப்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர், பொள்ளாச்சி -- தாராபுரம் மற்றும் -கரூர், பொள்ளாச்சி -- பாலக்காடு, பொள்ளாச்சி -- கேரளா வடக்கஞ்சேரி (கொச்சி செல்லும் சாலை) சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி, நான்கு வழி சாலையாக விரிவுபடுத்த வேண்டும்.
பொள்ளாச்சியில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் பிரந்திய அலுவலகம் மற்றும்மத்திய அரசின் தென்னை ஆராய்ச்சி மற்றும் பூச்சி, நோய் கட்டுப்பாடு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்.
பாமாயில் இறக்குமதியை நிறுத்தவும், மத்திய அரசு நிறுவனம் கொள்முதல் செய்யும் கொப்பரை தேங்காயில் எண்ணெய் உற்பத்தி செய்து, 'பாரத் தேங்காய் எண்ணெய்' என்ற பெயரில் மக்களுக்கு விற்க வேண்டும். இதனால், தேங்காய்க்கு அதிகவிலை கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.
கொப்பரை தேங்காய் ஆதார கொள்முதல் விலையை கிலோவுக்கு, 150 ரூபாயாக அதிகரிக்க வேண்டும். தமிழக அரசு உரித்த ஒரு தேங்காயை, 20 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யவும், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் வழங்க, மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து சென்னை தாம்பரம் (பழநி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக) இரவு நேர தினசரி ரயில், பொள்ளாச்சி --- மேட்டுப்பாளையம் தினசரி பயணியர் ரயில் இயக்க வேண்டும்.எர்ணாகுளம் (கொச்சி) -- பாலக்காடு பயணியர் ரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டித்து, ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.