தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா


ADDED : அக் 30, 2024 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 11:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார் ; இருகூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருது பாண்டியர் விழா நடந்தது.

இருகூர் தேவர் சிலை அமைப்பு குழு மற்றும் பராமரிப்பு குழு சார்பில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின், 117 வது ஜெயந்தி விழா மற்றும் 223 வது மருது பாண்டியர் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இருகூர் அங்காளம்மன் கோவில் திடலில், தேவர் சிலை முன் கணபதி ஹோமம்நடத்தப்பட்டு விழா துவங்கியது.

பேரூராட்சி தலைவர் சந்திரன் தலைமை வகித்து கொடியேற்றினார். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சி நிர்வாகிகள், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முளைப்பாரி மற்றும் பால் குடங்களை பெண்கள் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.

சிலை அமைப்பு குழு, பராமரிப்பு குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். பசும்பொன் இளைஞர் முன்னணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், சூலுார், பள்ளபாளையம், ராசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us