/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் சிக்கிய ரோந்து போலீசார்
/
விபத்தில் சிக்கிய ரோந்து போலீசார்
ADDED : ஜூலை 02, 2025 11:04 PM
தொண்டாமுத்தூர்; பேரூர் போலீஸ் ஸ்டேஷனில், முதுநிலை காவலராக கண்ணதாசன், 38 மற்றும் இரண்டாம் நிலை காவலராக ஜெபசிங்,36 ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் இரவு, இருவரும் ஒரே பைக்கில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாதம்பட்டியில் இருந்து பேரூர் நோக்கி செல்லும்போது, பச்சாபாளையம், சிறுவாணி மெயின் ரோட்டில் எதிரே மது போதையில் அதிவேகமாக வந்த பச்சாபாளையத்தை சேர்ந்த பிரேம்குமார்,25 என்பவரின் பைக், கட்டுப்பாட்டை இழந்து, காவலர்களின் பைக் மீது மோதியது.
இதில், காவலர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய பிரேம்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அவ்வழியாகச் சென்றவர்கள், மூவரையும் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.