/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 20, 2025 06:12 AM
அன்னுார் : பொன்னே கவுண்டன் புதூரில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து விநாயகர் சன்னதி, அம்மன் கோபுரம், சுற்றுப் பிரகாரம், மண்டபம், மதுரை வீரன் சன்னதி, குதிரை வாகனம் ஆகியவை அமைக்கப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.
இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. இரவு முதற் கால வேள்வி பூஜை நடந்தது. எண் வகை மருந்து சாற்றப்பட்டது. நேற்று காலை 10:15 மணிக்கு கோபுரம், விநாயகர், பட்டத்தரசி அம்மன், மதுரை வீரன், வெள்ளையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.