/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 08, 2025 09:33 PM
அன்னுார்; குன்னத்துார் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.
குன்னத்துாரில், கோவை சத்தி சாலையில் உள்ள படைவேட்டம்மன் என்று அழைக்கப்படும் பட்டத்தரசி அம்மன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2011ல் கும்பாபிஷேகம் நடந்தது.
தற்போது, கோமாதா, குதிரை வாகனங்கள் உள்ளிட்ட ஒன்பது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சுற்றுச்சுவர், தரைத்தளம், அன்னதான கூடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழா வருகிற 14ம் தேதி காலை 9:00 மணிக்கு, விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. கணபதி ஹோமம், மகாலட்சுமி யோகம், நவகிரக ஹோமம் நடைபெறுகிறது. மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.
வரும் 15ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், பரிவார மூர்த்திகளுக்கு மருந்து சாற்றுதலும் நடைபெறுகிறது. மாலையில் மூன்றாம் கால பூஜையும், லலிதா சகஸ்ர நாம பாராயணமும் நடக்கிறது.
வரும் 16ம் தேதி காலை 9:30 மணிக்கு, விநாயகர், பட்டத்தரசி அம்மன், பரிவார தெய்வங்கள் மற்றும் ஆலய கோபுரத்திற்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
மூன்று நாட்களும் திருமுறை பாராயணம் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற விழாக் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.