/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
/
பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 26, 2025 07:18 AM
அன்னூர்: பச்சாபாளையம், பட்டத்தரசி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
அன்னூர் அருகே பெரியூர் பச்சாபாளையத்தில் உள்ள, பட்டத்தரசி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.
இதையடுத்து, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
இன்று மாலை கோயிலுக்கு முளைப்பாலிகை எடுத்து வருதலும், விநாயகர் வழிபாடும், முதற்கால வேள்வி பூஜையும் நடக்கிறது. நாளை (27ம் தேதி) காலை 8:30 மணிக்கு விமான கோபுரத்திற்கும், இதையடுத்து பட்டத்தரசி அம்மனுக்கும், புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகிறார். பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

