/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளி கவுன்சிலர் பதவியேற்பில் சரமாரி புகார்
/
மாற்றுத்திறனாளி கவுன்சிலர் பதவியேற்பில் சரமாரி புகார்
மாற்றுத்திறனாளி கவுன்சிலர் பதவியேற்பில் சரமாரி புகார்
மாற்றுத்திறனாளி கவுன்சிலர் பதவியேற்பில் சரமாரி புகார்
ADDED : நவ 26, 2025 07:19 AM

அன்னூர்: உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. அன்னூர் பேரூராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் நாகமாபுதூர் மாற்றுத்திறனாளி சுமதியை, கவுன்சிலராக நியமித்து பேரூராட்சிகளின் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுமதி, மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில், இந்திய அணியில் விளையாடியுள்ளார். குண்டெறிதலில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக கவுன்சிலர்கள் சிலர் பேசுகையில், 'மாற்றுத்திறனாளி கவுன்சிலர் தேர்வு குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை; விவாதிக்கவில்லை. தன்னிச்சையாக பேரூராட்சி நிர்வாகம் நடந்து கொண்டது' என புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமுகை பேரூராட்சியில்... இதே போல், சிறுமுகை பேரூராட்சியில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மாவட்ட நிர்வாகம் மனுக்களை பரிசீலனை செய்து, வச்சினம்பாளையத்தைச் சேர்ந்த நிர்மலா தேவி என்பவரை தேர்வு செய்தது. அவரது நியமன உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மாலதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாலா, நியமன உறுப்பினர் நிர்மலா தேவிக்கு, சான்றிதழ் வழங்கி, பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணைத் தலைவர் செந்தில்குமார், வார்டு கவுன்சிலர்கள், நகர செயலாளர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

