/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போர் வீரர்கள் வசித்த ராமநாதபுரம் பகுதி
/
போர் வீரர்கள் வசித்த ராமநாதபுரம் பகுதி
ADDED : நவ 26, 2025 07:19 AM
ம துரை நாயக்கர் காலத்தில் கோயமுத்தூர், மலை அரசர்களும் மைசூரும் நடத்திய படையெடுப்புகளைத் தடுக்க, முக்கிய ராணுவ மையமாக இருந்தது. இந்த கோட்டைகளுக்கு தென்மாவட்டங்களிலிருந்து, போர் வீரர்களை அனுப்பியவர் திருமலை நாயக்கர்.
அவ்வாறு குடியேறியபோர் வீரர்கள், வாலாங்குளம் கிழக்கே புதிய குடியிருப்பை அமைத்து, அது பின்னர் ராமநாதபுரம் என வளர்ந்தது. 17ம் நூற்றாண்டில் குடியேறிய இவ்வீரர்கள், சுமார் நுாறு ஆண்டுகள் போர்த் தொழிலில் ஈடுபட்டனர். 1800க்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்ததும், போர்த் தொழில் குறைந்து, வீரர்கள் ராமநாதபுரம் - சூலுார் பகுதிகளில், வெற்றிலை விவசாயத்தைத் தொடங்கினர். பாரம்பரிய யுத்தக்கலைகளை மறக்காமல், மல்யுத்தம், சிலம்பம், வாள்சண்டை போன்றவை திருவிழாக்களில் “வீர விளையாட்டுக்கள்” என்ற பெயரில் தொடர்ந்தன. இன்றும் அந்த மரபை நினைவூட்டும் கோதாப்பட்டிகள் (பயிற்சி மையங்கள்) ராமநாதபுரம் மற்றும் உடையாம்பாளையம் பகுதிகளில் காணப்படுகின்றன.

