/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு திருவிழா
/
பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு திருவிழா
ADDED : மே 21, 2025 11:27 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே காமராஜ் நகரில் பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நடந்தது.
இங்குள்ள பட்டத்தரசி அம்மன் கோவில், மதுரை வீரன் கோவில், கூப்பிடு விநாயகர் கோவில், பாலமுருகர் கோவில், விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் சார்பில் பூச்சாட்டு விழா நடந்தது. கடந்த, 4ம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து, பூச்சாட்டு, பால் கம்பம் போடுதல், அணி கூடை, சாமி நகைகள் எடுத்து வருதல் நடந்தன. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல், அம்மன் அபிஷேக பூஜை, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வருதல், அக்னி கரகம் அழைத்து கோவில் வந்து அடைதல் நடந்தன.
இன்று காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மதுரை வீரன் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், அன்னப்பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.