/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
/
பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா
ADDED : ஜூன் 11, 2025 09:13 PM

அன்னுார்; பொகலூர் பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.
பொகலூரில், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சிறுமுகை ஆற்றில் இருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 8ம் தேதி முனி விரட்டுதலும், நேற்று முன்தினம் கோவிலுக்கு ஆயுதம் மற்றும் கரகம் எடுத்து வருதலும் நடந்தது.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு படைக்கலம் எடுத்து வருதலும், காலை 6:00 மணிக்கு பட்டத்தரசி அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடந்தது.
கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. மதியம் மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர். அலகு குத்தி அம்மனை வழிபட்டனர். மதியம் கிடாய்கள் அம்மனுக்கு வெட்டி பலியிடப்பட்டன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இன்று மதியம் 12:00 மணிக்கு மறுபூஜை நடைபெறுகிறது.