ADDED : செப் 19, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கோவை: பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் இன்ஜினியரிங் கல்லுாரிகள் இடையே ஆண்களுக்கான நான்காவது பால் பேட்மின்டன் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கின; இன்று நிறைவடைகின்றன.
ஏ, பி, சி பிரிவுகளில் தலா மூன்று மற்றும் ‘டி’ பிரிவில் நான்கு அணிகள் பங்கேற்றுள்ளன. கே.கே.ஐ.டி., அணி 2–0 என்ற செட் கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரியையும், கே.பி.ஆர்.ஐ.இ.டி., 2–0 செட் கணக்கில் எச்.சி.இ.டி., அணியையும், எஸ்.ஆர்.இ.சி., அணி 2–1 செட் கணக்கில் கே.சி.இ., அணியை வென்றன.
எச்.ஐ.சி.இ.டி., அணி 2–1 செட் கணக்கில் சி.ஐ.டி., கல்லுாரியையும், எஸ்.என்.எஸ்.சி.டி., 2–0 செட் கணக்கில் என்.ஐ.இ.டி., அணியையும், என்.ஐ.இ.டி., 2–0 செட் கணக்கில் பி.எஸ்.ஜி.ஐ., டெக்., அணியையும் வென்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
