ADDED : செப் 19, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட ‘ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்’ நலச்சங்கம் சார்பில், ‘காந்திஜெயந்தி டான் டூ டஸ்க்’ எனும் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் மற்றும் மாணவ, மாணவியருக்கான கோ–கோ போட்டி, அக்., 2ல் நடக்கிறது. சரவணம்பட்டி டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடக்கும் போட்டியில் 12–14 வயதுடையவர்கள் பங்கேற்கலாம்.
ஆர்வம் உள்ளவர்கள் வரும் 27ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, 94430 59837, 96292 29052 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, சங்க செயலாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
