துப்பாக்கிச் சுடும் போட்டி எஸ்.என்.எம்.வி., வெற்றி
துப்பாக்கிச் சுடும் போட்டி எஸ்.என்.எம்.வி., வெற்றி
ADDED : செப் 19, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கோவை: ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை, அறிவியல் கல்லுாரியின் இளங்கலை 2-ம் ஆண்டு டிஜிட்டல் சைபர் தடய அறிவியல் துறை மாணவி ஹேமாம்பிகை, மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க, அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவியின் சாதனையைப் பாராட்டி கல்லுாரி நிர்வாகத்தினர், முதல்வர் சுப்பிரமணி, பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
