/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செக்போஸ்ட் பகுதியில் நடைபாதை சேதம்; விபத்து அபாயம்
/
செக்போஸ்ட் பகுதியில் நடைபாதை சேதம்; விபத்து அபாயம்
செக்போஸ்ட் பகுதியில் நடைபாதை சேதம்; விபத்து அபாயம்
செக்போஸ்ட் பகுதியில் நடைபாதை சேதம்; விபத்து அபாயம்
ADDED : மார் 18, 2024 11:05 PM

நடைபாதை சேதம்
கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் மக்கள் செல்லும் நடைபாதை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அவ்வழியில் செல்ல அச்சப்பட்டு சர்வீஸ் ரோட்டில் நடந்து செல்கின்றனர். இதனால் விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த நடைபாதையை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- - சரவணன், அரசம்பாளையம்.
ரோடு அகலப்படுத்தபடுமா
கிணத்துக்கடவு - கோதவாடி செல்லும் ரோடு சிறிது துாரம் அகலமாகவும், சிறிது துாரம் ரோட்டின் அகலம் குறைவாகவும் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் இவ்வழியில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை கவனித்து இந்த ரோட்டின் இரண்டு புறமும் விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - கார்த்தி, கோதவாடி.
டிவைடர் வையுங்க
கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் விபத்து அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பைக் ஓட்டுநர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பைக் ஓட்டுநர்கள் நலன் கருதி போலீசார் இங்கு டிவைடர்கள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ரமேஷ், கிணத்துக்கடவு.
மண் குவியல்
உடுமலை - பழநி ரோட்டில், ஸ்ரீ நகர் சந்திப்பில் மழைநீர் வடிகால், பாலம் பணிக்காக தோண்டப்பட்ட மண் குவியலாக அருகில் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் துாசி பறக்கிறது. அம்மண்ணை அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
தேங்கும் கழிவு நீர்
பொள்ளாச்சி, திலகர் வீதியில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் சாக்கடை அடைத்து நிற்பதால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மற்றும் கொசுத்தொல்லை அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது. பொதுசுகாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அதிகாரிகள் இதை கவனித்து விரைவில் அகற்றம் செய்ய வேண்டும்.
- -பாலாஜி, பொள்ளாச்சி.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, பசுபதி வீதியில் குப்பைக்கழிவுகள் சுத்தம் செய்யப்படாமல் குவிந்து கிடப்பதால், தெருநாய்கள் அவற்றை இழுத்து ரோட்டில் பரப்புகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராகவன், உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, சந்தைரோட்டில் வாகனங்கள் ரோட்டின் பாதி வரை நிறுத்தப்படுகின்றன. மற்ற வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்வதற்கு இடையூறாக உள்ளது. சரக்கு வாகனம், பஸ்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவக்குமார், உடுமலை.
பிளாஸ்டிக் கழிவுகள்
உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் விரிவாக்கப்பகுதியில், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி சுகாதாரத்துறையினர் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, அண்ணா குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. மாலை நேரங்களில் அப்பகுதியில் இருள் சூழ்ந்திருப்பதால், வாகன ஓட்டுநர்கள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமலும், குண்டு குழிகளான ரோட்டினாலும் விபத்துக்குள்ளாகின்றனர்.
- பானுமதி, உடுமலை.
நிழற்கூரை இல்லை
உடுமலை போடிபட்டியில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை முறையாக இல்லை. நாள்தோறும் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். நிழற்கூரை இல்லாமல் சிரமப்படுகின்றனர். அங்கு நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செந்தில், போடிபட்டி.
ஓவர் லோடு வாகனம்
பொள்ளாச்சி, பில்சின்னாம்பாளையம் செல்லும் ரோட்டில் அதிக அளவு தேங்காய் மட்டையை ஏற்றி முறையாக தார் பாலின் சீட்டு வைத்து மூடாமல், திறந்த வெளியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ரோட்டோரத்தில் உள்ள மரக்கிளையில் சிக்கி மட்டை ரோட்டில் வருவதால், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க போக்குவரத்துத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ஆனந்த், மாக்கினாம்பட்டி.

