/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வீஸ் ரோட்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு; விபத்து அபாயம்
/
சர்வீஸ் ரோட்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு; விபத்து அபாயம்
சர்வீஸ் ரோட்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு; விபத்து அபாயம்
சர்வீஸ் ரோட்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு; விபத்து அபாயம்
ADDED : நவ 17, 2024 09:51 PM

இருளில் ஒளிராத மின் விளக்கு
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஒளிராததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பயணியர் செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி மின் விளக்குகளை பராமரிப்பு செய்து சரி செய்ய வேண்டும்.
- - ராம கிருஷ்ணன், பொள்ளாச்சி.
நடைபாதை ஆக்கிரமிப்பு
கிணத்துக்கடவு பகுதியில், சர்வீஸ் ரோட்டின் இருபுறத்திலும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் நடந்து செல்லும் மக்கள் பலர் சர்வீஸ் ரோட்டில் நடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் இருப்பதால், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - பெருமாள், கிணத்துக்கடவு.
ஆட்டோ தொல்லை
கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள, ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதுடன், மக்கள் பலர் அவதி அடைந்துள்ளனர். எனவே, ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - பிராங்கிளின், கிணத்துக்கடவு.
போக்குவரத்து நெரிசல்
வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் என பலர் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே, இங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -வேலுசாமி, வால்பாறை.
நகராட்சி அலுவலகத்தில் குப்பை
உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் பழைய டியூப் லைட்டுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், அந்த இடம் பாழாகி வருகிறது. அவற்றை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுப்பிரமணி, உடுமலை.
இடையூறாக பிளக்ஸ் போர்டு
உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், கால்நடை மருத்துவமனை முன், பிளக்ஸ் போர்டுகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டுநர்களின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பிளக்ஸ் போர்டுகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.
- சுந்தரம், உடுமலை.
கால்நடைகள் உலா
உடுமலை உழவர் சந்தை ரோட்டில், கால்நடைகள் கட்டுபாடில்லாமல் உலா வருகின்றன. அடிக்கடி வாகனங்களின் குறுக்கே வருவதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும், கால்நடைகள் ரோட்டில் தாறுமாறாக செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
- வசந்தி, உடுமலை.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில், இரவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் வாகன ஓட்டுநர்களை துரத்துவதால் கீழே விழுகின்றனர். பொதுமக்கள் ரோட்டில் நிம்மதியாக நடப்பதற்கும் வழியில்லாமல் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கும் அச்சப்படுகின்றனர்.
- கிருபாகரன், உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, தளி ரோடு போடிபட்டி ஊராட்சியில், பஸ் ஸ்டாப்பில் குப்பை குவிந்து காணப்படுகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை அகற்ற ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ரோட்டின் பாதி வரை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இரவு நேரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களில் வெளிச்சம் இல்லாததால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் ஒதுங்கி செல்லும்போது விபத்துக்குள்ளாகின்றனர். விதிமுறை மீறி இவ்வாறு நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணகுமார், உடுமலை.
'பறக்கும்' வாகனங்கள்
உடுமலை, கல்பனா ரோட்டில் வாகனங்கள் அதிவேகத்துடன் செல்கின்றன. பொதுமக்கள் அதிகம் நடக்கும் பரபரப்பான ரோட்டில் வாகனங்கள் இவ்வாறு அதிவேகத்துடன் செல்வதால் நடந்து செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வனிதா, உடுமலை.
சேதம் அடைந்த ரோடு
பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி காஸ்மோ வில்லேஜ், வள்ளலார் நகர் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதில், செல்லும் வாகன ஓட்டுநர்கள் பலர் கீழே விழுந்து காயம் ஏற்படுவதுடன், அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். எனவே, இந்த ரோட்டை மக்கள் நலன் கருதி விரைவில் சீரமைக்க வேண்டும்.
- -சிவானந்தம், பொள்ளாச்சி.