/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலுவை தொகை செலுத்த வரும் 30ம் தேதி வரை கெடு
/
நிலுவை தொகை செலுத்த வரும் 30ம் தேதி வரை கெடு
ADDED : செப் 23, 2024 12:15 AM
கோவை : வீட்டு வசதி வாரிய விதிமுறைப்படி, நிலுவை தொகை செலுத்தாத பலர், வரும் 30ம் தேதிக்குள் கணக்கை நேர் செய்ய, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவுக்கு உட்பட்ட மனைகளில், கணபதி, வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், வீரகேரளம், காளப்பட்டி மற்றும் முதலிபாளையம் பகுதிகளில் உள்ள 177 ஒதுக்கீடு தாரர்கள், வாரிய விதிமுறைகளின் படி, பணம் செலுத்தும் காலம் முடிவுற்றும், அரசு வட்டிதள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும், பலர் நிலுவை தொகையை செலுத்த வரவில்லை.
ஆகையால், ஒதுக்கீட்டாளர்கள், உடனே தங்களிடம் உள்ள அசல் விண்ணப்பம், ஒதுக்கீட்டு ஆணை, அசல் ரசீதுகள் மற்றும் அசல் ஆவணங்களுடன், இவ்வலுவலக வேலை நாட்களில், கோவை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்துக்கு நேரில் தொடர்பு கொண்டு, வரும் 30ம் தேதிக்குள் கணக்கை நேர் செய்து, நிலுவை தொகையை செலுத்தி வாரிய விதிமுறைகளின் படி, கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில், ஒதுக்கீடு உத்தரவு எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும் என, மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.