/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் நிலையங்களில் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம்
/
தபால் நிலையங்களில் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம்
தபால் நிலையங்களில் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம்
தபால் நிலையங்களில் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம்
ADDED : ஜூலை 02, 2025 11:05 PM
கோவை; தபால் நிலையங்களில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல், யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.
தபால் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில், ஒரு தனித்துவமான 10 இலக்க குறியீடு கொண்ட 'டிஜிபின்' என்ற புதிய டிஜிட்டல் முகவரி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
தற்போதைய அஞ்சல் குறியீடுகளை விட, 'டிஜிபின்' மிகவும் துல்லியமாக, வீடு, கடை போன்ற குறிப்பிட்ட இடங்களை அடையாளம் காண உதவுகிறது.
அடுத்ததாக, பல தபால் நிலையங்களில் ஐ.டி.சி., மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இரண்டு அல்லது மூன்று தபால் பட்டுவாடா மையங்கள் இணைக்கப்பட்டு, மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்த படியாக, ஆகஸ்ட் முதல் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இனி, தபால் நிலையங்களில் 'க்யூஆர்' குறியீட்டை ஸ்கேன் செய்து, யு.பி.ஐ., செயலிகள் வாயிலாக கட்டணம் செலுத்த முடியும்.