ADDED : ஆக 19, 2025 09:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் வழியாக, மதுரை --- கோவை ரயில் நேற்று காலை, 11:15 மணிக்கு வந்தது. அப்போது, ரயிலின் முன் பக்கம் மயில் சிக்கி உயிரிழந்தது.
இதை கண்ட ரயில்வே பணியாளர்கள், கிணத்துக்கடவு ஸ்டேஷனில் பயணியரை இறக்கி விட ரயில் நிறுத்தப்பட்ட போது, ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில், ரயிலின் முன்பகுதியில் சிக்கியிருந்த மயிலை எடுத்து, பிளாட்பார்ம் ஓரத்தில் வைத்தனர். கிணத்துக்கடவு ரயில்வே நிர்வாகம் சார்பில், பொள்ளாச்சி வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, இறந்த மயிலை ஒப்படைத்தனர்.

