/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரான்ஸ்பார்மர் அருகே இறந்து கிடந்த மயில்
/
டிரான்ஸ்பார்மர் அருகே இறந்து கிடந்த மயில்
ADDED : பிப் 02, 2026 05:11 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் பகுதியில், டிரான்ஸ்பார்மர் அருகே மயில் இறந்து கிடந்தது.
பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் அதிகளவு மயில்கள் உலா வருகின்றன. இதில், விளை நிலங்கள் மற்றும் காடு போன்ற இடங்களில் அதிக அளவில் உள்ளது.
தற்போது பொள்ளாச்சி நகர் பகுதிகளில் ஆங்காங்கே மயில் தென்படுகிறது. இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி அருகே, வாட்டர் டேங்க் ரோட்டின் ஓரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே மயில் ஒன்று, இறந்த நிலையில் கிடந்தது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிலர், டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி மயில் உயிரிழந்திருக்கலாம் என்றனர். மேலும், இறந்த மயிலை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

