/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயில் தொல்லையால் விவசாயம் பாதிப்பு
/
மயில் தொல்லையால் விவசாயம் பாதிப்பு
ADDED : பிப் 03, 2025 04:38 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையத்தில் விவசாய விளைநிலத்தில் பயிர்களை மயில்கள் சேதம் செய்வதால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள, நல்லட்டிபாளையம், செட்டியக்காபாளையம், கோதவாடி பகுதிகளில் தக்காளி, நிலக்கடலை, வெண்டைக்காய், அவரைக்காய் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், விதைப்பு செய்து 10 நாட்களில், சிறிதளவு வளர்ந்த செடிகளை மயில்கள் சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் மீண்டும் விதைப்பு செய்யும் நிலை ஏற்படுகிறது. சாகுபடியும் பாதிக்கப்படுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'செட்டியக்காபாளையம் பகுதியில், கடந்த வாரம் கொத்தவரை பயிரிட்டோம். ஆனால், பயிரை மயில் சேதப்படுத்தி விட்டது. இதனால், மீண்டும் விதைப்பு செய்யும் போது, செலவு அதிகமாகிறது. பயிர் வளர்ச்சியும் பாதிக்கிறது.
'விதைப்பு பருவத்திலேயே இப்படி இருந்தால், பூப்பிடிக்கும் பருவம், காய்ப்பு பருவத்தில் இன்னும் பாதிப்பு அதிகரிக்கும். மயில் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

