sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கடலை மிட்டாய், 173 லுங்கி பறக்கும் படையினர் அதிரடி

/

 கடலை மிட்டாய், 173 லுங்கி பறக்கும் படையினர் அதிரடி

 கடலை மிட்டாய், 173 லுங்கி பறக்கும் படையினர் அதிரடி

 கடலை மிட்டாய், 173 லுங்கி பறக்கும் படையினர் அதிரடி


ADDED : மார் 17, 2026 09:30 PM

Google News

ADDED : மார் 17, 2026 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாவட்டத்தில், 90 பறக்கும் படை, 90 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று ஷிப்ட் முறையில், இக்குழுவினர் பணிபுரிகின்றனர். தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தொண்டாமுத்துார் சட்டசபை தொகுதியில் பூலுவபட்டியில் வாசுகி தலைமையிலான பறக்கும் படையினர், சஞ்சீவ் என்பவர் கொண்டு வந்த ரூ.1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

கேரளாவில் இருந்து கோவையில் சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் வாங்க, ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில், ஆவணம் ஏதுமின்றி, ரூ.6.59 லட்சம் கொண்டு வந்தவரிடம், பிரியா தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

சத்யா தலைமையிலான பறக்கும் படையினர் மற்றொரு இடத்தில் ஆய்வின் போது, ரூ.1 லட்சம் பறிமுதல் செய்தனர்.

நேற்று மாலை காந்திபுரம் பகுதியில் கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தபோது, 173 லுங்கி, 173 கடலை மிட்டாய் கொண்டு சென்றதை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்பதால், அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இவற்றை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசனிடம் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us