/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீளமேடு ஏபிசி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
பீளமேடு ஏபிசி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 18, 2025 10:56 PM
கோவை, ; பீளமேடு, ஏபிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கடந்த 49 வருடங்களாக அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு, சிறப்பான கல்வியை வழங்குகிறது.
மாணவர்களின் பல்திறனை வளர்க்க அபாகஸ், ரோபோடிக்ஸ், ஆங்கில பேச்சு பயிற்சி, செஸ், பேண்ட், கராத்தே, யோகா, சிலம்பம், கிரோசட், நடனம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.
சனிக்கிழமைதோறும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், பாடம் சார்ந்த மன்றங்கள் நடைபெறுகின்றன.
ஆண்டுதோறும் புதிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது.மாணவர் பசுமை படை, சிறுதுளி அமைப்பு, சாரண சாரணியர் இயக்கம், 'குட்டி காப்ஸ்' போன்ற இயக்கங்களுடன் இணைந்து, சமூக சேவை புரிந்து வருகின்றனர். விளையாட்டு போட்டிகளில் ஆண்டுதோறும் புதிய சாதனைகளை, மாணவர்கள் படைத்து வருகின்றனர்.
முக்கியமாக, இப்பள்ளி மாணவர்கள், பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 25 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்து வருகின்றனர்.