/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீளமேடு முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா
/
பீளமேடு முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா
பீளமேடு முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா
பீளமேடு முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருவிழா
ADDED : ஜூன் 08, 2025 10:46 PM

கோவை; பீளமேடு அண்ணாநகர் இ.வி.ஆர்.,பெரியார் நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
மஹா கும்பாபிஷே கத்தையொட்டி, கடந்த 6ம் தேதி காலை 9:00 மணிக்கு மஹா கணபதி, மஹாலட்சுமி, நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை 3:00மணிக்கு, முளைப்பாலிகை தீர்த்தக்குடங்கள் எடுத்து வரும் வைபவம்நடந்தது.
மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூமிதேவி வழிபாடு, அங்குரம் காப்பு கட்டுதல், கும்ப பூஜைகள் நடந்தன. பாலாலய மூர்த்தியை எழுந்தருள செய்து, யாகசாலைக்கு அழைத்தல் ஆகியவை நடந்தன.
நேற்று, வேள்விச்சாலையிலிருந்து கும்பக்கலசங்கள், கோபுர விமானங்களுக்கும் கருவறைக்கும் எழுந்தருளுவிக்கப்பட்டு, ஏககாலத்தில் புனித நீர் சுவாமி மீதும், விமான கும்ப கலசங்களின் மீதும் சிவாச்சாரியர்கள் ஊற்றி கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர்.திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.