ADDED : ஜன 20, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ஆவாரம்பாளையம் அருகே தார் ரோட்டை சேதப்படுத்திய வாகன உரிமையாளருக்கு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி, 28வது வார்டு ஆவாரம்பாளையம் அருகே, டெக்ஸ்டூல் பாலசுந்தரம் ரோட்டில், 24 மணி நேர குடிநீர் திட்ட பணிகளை, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, நான்கு சக்கர வாகனத்தை ரோட்டில் நிறுத்தி, தினமும் தண்ணீரில் சுத்தம் செய்துவந்த நபரால் ரோடு சேதமடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வாகன உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கமிஷனர் உத்தரவிட்டார். மாநகர பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.