/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
2003க்கு முன் போனஸ் சலுகை பெற்ற ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதியம்! சங்க கூட்டத்தில் தீர்மானம்

ADDED : மார் 20, 2025 11:30 PM
பொள்ளாச்சி: கடந்த, 2003ம் ஆண்டுக்கு முன், ஒப்பந்த பணியாளராக பணியாற்றி போனஸ் சலுகை பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்க கூட்டம், பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, தனியார் மண்டபத்தில் நடந்தது. மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார், மாநில துணை பொதுச்செயலாளர் சக்திவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வில், திட்ட தலைவராக சுப்ரமணியம், செயலாளராக ராஜசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி கோட்ட தலைவராக மாரிமுத்து, கவுரவ தலைவராக பெரியசாமி, செயலாளராக மயில்சாமி, உதவிச்செயலாளர்களாக வெங்கடேசன், தண்டபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
உடுமலை கோட்ட தலைவராக சம்பத், செயலாளராக பாலதண்டபாணி, உதவி செயலாளராக கோவிந்தராஜ் மற்றும், நெகமம், அங்கலக்குறிச்சி கோட்ட புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மின்சார வாரியத்தில், கடந்த, 1971, செப்., ஒன்றாம் தேதிக்கு முன், பணிபுரிந்த பணியாளர்களுக்கு, கருணைத் தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
கடந்த, 2003ம் ஆண்டுக்கு முன், ஒப்பந்த பணியாளராக பணியாற்றி போனஸ் உள்ளிட்ட சலுகைகளை பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயன்பாட்டினை முறைப்படுத்த வேண்டும்.
இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.