/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 03, 2025 11:38 PM
பொள்ளாச்சி; பி.எஸ்.என்.எல்., டி.ஓ.டி., ஓய்வூதியர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்தது. சங்க நிர்வாகி சிவசாமி தலைமை வகித்தார். கிளை செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் நிசார் அகம்மது, கோரிக்கையை விளக்கி பேசினார்.
மாவட்ட பொறுப்பாளர் நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். அதில், மத்திய அரசின் பென்சன் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
* உடுமலையில், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர் சங்கம் சார்பில், காந்திநகர் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள ஓய்வூதியர்களுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

