/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2025 09:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்தது. பி.எஸ்.என்.எல்.இ.யு., கிளைச் செயலாளர் மதன், தலைமை வகித்தார்.
ஏ.ஐ.டி.பி.ஏ., கிளைச் செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் நிசார்அகம்மது, நடராஜன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
அதில், 4ஜி, 5ஜி சேவைகளை மேம்படுத்தி தடையின்றி வழங்க வேண்டும். எப்.டி.டி.எச்., இணைப்புகள் சேவையை தரமானதாக வழங்க வேண்டும்.
சம்பள கமிஷனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகிகள் சப்தகிரி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.