ADDED : ஜன 29, 2026 05:19 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
* பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். துணை தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சுப்ரமணியன் கோரிக்கை குறித்து பேசினர். மாவட்ட தலைவர் மதன் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.
* ஆனைமலை தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்ட துணை தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலர் பழனிசாமி கோரிக்கை குறித்து பேசினார்.
அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் ஜான்பாட்சா, செயலர் சபரிநாதன், வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகி மாரியப்பன், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி திருஞானம், ஓய்வு பெற்ற தாசில்தார் திருஞானம் மற்றும் பலர் பேசினர். பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
* கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழக அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக்கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் ராமசாமி, செயலாளர் மணியன், பொருளாளர் கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும், 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனக்காவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம், 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
