/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் தர்ணா

ADDED : டிச 04, 2024 10:25 PM
கோவை; ஆட்சியாளர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தர்ணா போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருணகிரி வரவேற்றார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்ட, 83 பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை, தி.மு.க.,தனது சட்டசபை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், 70 வயதை கடந்தவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம், ஓய்வூதியர்களுக்கு காசில்லா மருத்துவ காப்பீட்டுத்திட்டம், அனைத்து ஓய்வூதியருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக, ரூ.7,850 வழங்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தர்ணா போராட்டம் நடந்தது. இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், குடிநீர்வடிகால்வாரியம், அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் என்று ஏராளமான ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.