/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
/
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 25, 2025 11:05 PM

கோவை: கோவையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில்,--- தெற்கு தாசில்தார் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் பலராமன் பேசியதாவது:
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்ட பென்ஷனர்களுக்கு, 10 சதவீதம் ஊதிய உயர்வு அளிப்பதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதை இதுவரை வழங்கவில்லை.
மருத்துவ காப்பீட்டில் இருந்து, மருத்துவ செலவு செய்தவர்கள் பலருக்கு பணம் கொடுக்காமல் பில்லை நிலுவையில் வைத்துள்ளனர். அதை வழங்க வேண்டும்.
பென்ஷனர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் மருத்துவ உதவி தொகை, 1000 ரூபாய் கிடைக்கவில்லை. பென்ஷன்தாரர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்து உடனே நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கோவை மாவட்ட செயலாளர் உதயகுமார், செயலாளர் சிங்காரவேலு கோவை, நீலகிரி மாவட்ட கல்லுாரி பேராசிரியர் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் உட்பட, 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
70 வயதுக்கு மேற்பட்ட பென்ஷனர்களுக்கு, 10 சதவீதம் ஊதிய உயர்வு அளிப்பதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதை இதுவரை வழங்கவில்லை.
மருத்துவ காப்பீட்டில் இருந்து, மருத்துவ செலவு செய்தவர்கள் பலருக்கு பணம் கொடுக்கமால் பில்லை நிலுவையில் வைத்துள்ளனர்.

