ADDED : செப் 22, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
தபால் துறை, பி.எஸ்.என்.எல்., பி.எப்., தமிழக அரசு பொது ஓய்வூதியர் சங்கம்,போக்குவரத்து, மற்றும் ஆசிரியர் அமைப்புகள் டாடாபாத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தின.
‘‘எட்டாவது ஊதியக்குழு பலன்களை ஜனவரி முதல் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, 11 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 3 கட்ட போராட்டம் நடத்த முடிவு எடுத்தோம். இது 2ம் கட்ட போராட்டம். அடுத்து டில்லி செல்வோம்” என்று சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அரங்கநாதன், கருணாநிதி கூறினர்.
