ADDED : செப் 22, 2026 05:01 PM
1. குப்பை குவியல் கணுவாய் தடுப்பணையில் பன்னீர்மடை ஊராட்சியினர் குப்பை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுத்து, ஏற்கனவே குவிந்துள்ள குப்பை அகற்ற வேண்டும்.
–ஆறுமுகம்: 2. எல்லைத்தோட்டம் பீளமேடு எல்லைத்தோட்டம் ரோட்டில் ஸ்டீல் நிறுவனத்தின் வழியாக தினமும் குப்பை சேகரிப்பு வாகனம் செல்கிறது. ஆனால், நிறுவனத்திற்கு வெளியே குவிந்துள்ள குப்பைகளை சேகரிப்பதே இல்லை.
–காயத்திரிதேவி: 3. திருச்சி ரோடு திருச்சி ரோட்டில், ஆல்வெர்னியா கான்வென்ட் அருகே உள்ள கோத்தாரி லேஅவுட் பிரதான ரோடு ஓரம் அப்பகுதி மக்கள் தினமும் குப்பை கொட்டுகின்றனர். அதை அள்ளிச் செல்ல வேண்டிய மாநகராட்சி குப்பை வாகனங்களும் அங்கேயே குப்பை கொட்டுவதுதான் அதிர்ச்சி.
–நாகரத்தினம்: 4. தெருநாய் தொல்லை(படம் இல்லை) சீரநாயக்கன்பாளையம் லட்சுமி நகரில் சுற்றித்திரியும் தெருநாய்கள் ரோட்டில் நடந்து செல்லும் குழந்தைகள், வயதானவர்களை துரத்துகின்றன. இதனால், அவ்வழியாக அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
–உமா: 5. கவுண்டம்பாளையம் கவுண்டம்பாளையம், முருகன் நகர் பிரதான ரோட்டில், தெருநாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. வாகனங்களில் செல்வோரை அவை துரத்துவதால், விபத்து அபாயம் உள்ளது.
–ராஜேஷ்: 6. ஒளிரா விளக்கு டவுன்ஹால் தாமஸ் வீதியில், தெருவிளக்கு 5 மாதங்களாக எரியவில்லை. இரவில் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
– ராணி சுதா: 7. நேரு நகர் நேரு நகரில் தெருவிளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லை. இரவில், இருள் சூழ்ந்து காணப்படுவதால், அவ்வழியாக செல்ல அச்சம் ஏற்படுகிறது. தெருவிளக்கை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
–கண்ணன்: 8. வெள்ளக்கிணறு வெள்ளக்கிணறு, குமாரசாமி அவென்யூவில், தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகள் இருளில் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது
–சஞ்சீவன்: 9. மரக்கிளைகளால் இடையூறு பீளமேடு, கல்லுாரி நகர் தெருக்களில் அடர்த்தியாக வளர்ந்துள்ள மரங்களின் கிளைகள் ரோட்டில் நீண்டு இருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
–மணி: 10. சாலையில் கழிவுநீர் விளாங்குறிச்சி ரோடு, சேரன் மாநகர் கே.வி. நகரில் வீட்டு கழிவுநீர் ரோட்டில் விடப்படுகிறது. எதிர்புறம் குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் உள்ளது.
–பாலு: :
