ADDED : செப் 22, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
கோவை: யூனிட்டி ரோட்டராக்ட் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. சவுமியா சிவகுமார், 13- வது தலைவராக பொறுப்பேற்றார். புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். கிழக்கு ரோட்டரி கிளப் தலைவர் ராஜேஷ் சின்னசாமி, செயலாளர் அதீத் ஆகியோர் சிறப்பித்தனர்.
‘13 வேர்கள்’ திட்டத்தில் 13 மரக்கன்று நடப்பட்டன. பராமரிக்கும் பொறுப்பை சங்க உறுப்பினர்கள் ஏற்றனர். மாற்றுத்திறன் குழந்தை பராமரிக்கும் பெற்றோர் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
