/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் மூடப்படாமல் இருக்கும் கால்வாயால் மக்கள் பாதிப்பு
/
வால்பாறையில் மூடப்படாமல் இருக்கும் கால்வாயால் மக்கள் பாதிப்பு
வால்பாறையில் மூடப்படாமல் இருக்கும் கால்வாயால் மக்கள் பாதிப்பு
வால்பாறையில் மூடப்படாமல் இருக்கும் கால்வாயால் மக்கள் பாதிப்பு
ADDED : நவ 12, 2024 05:28 AM

திறந்திருக்கும் கால்வாய்
வால்பாறை நகரில் நெடுஞ்சாலைத்துறை ரோட்டின் ஓரத்தில், கால்வாய் மூடப்படாமல் திறந்திருப்பதால் நடந்து செல்பவர்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும்.
- -சாந்தி, வால்பாறை.
விதிமீறும் வாகனங்கள்
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தின் முன், விதிமுறையை மீறி அதிக அளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு போலீசார் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- விசு, வால்பாறை.
கால்வாயை சீரமைக்கணும்
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், அண்ணா நகர் செல்லும் வழியில் ரோட்டோர கால்வாய் சேதமடைந்து இருப்பதால், கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- பெருமாள், கிணத்துக்கடவு.
பராமரிப்பு இல்லை
குடிமங்கலம் ஒன்றியம் வா.வேலூர் பிரிவிலுள்ள பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், பயணியருக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த நிழற்கூரையை ஊராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
நடைபாதை சரிசெய்யுங்க
கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள நடைபாதை புதர் நிறைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் இதை கவனித்து சரி செய்ய வேண்டும்.
-- லோகேஸ்வரன், கிணத்துக்கடவு.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, பழநி ரோட்டில் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து வரிசைகட்டி நிறுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. தற்போது ரோட்டில் மழைநீரும் தேங்கி நிற்பதால் வாகனங்கள் ஒதுங்கி செல்வதற்கும் இடைமில்லாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
- ராம்குமார், உடுமலை.
பாழாகும் நிழற்கூரை
உடுமலை எளையாமுத்துார் ரோடு சக்தி நகர் பஸ் ஸ்டாப்பில் 'குடி'மகன்கள் குடித்து விட்டு மதுபாட்டில்களை போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால், இந்த நிழற்கூரையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காளீஸ்வரன், உடுமலை.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை, புஷ்பகிரி வேலன் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாலை நேரங்களில் ரோட்டில் நடைபயிற்சி செல்பவர்களை துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களை நாய்கள் அச்சுறுத்துவதால் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
- சிவசாமி, உடுமலை.
சரக்கு வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, சத்திரம் வீதியில் காலை நேரங்களில் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அப்பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்வதற்கும் பெற்றோர் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் வழியில்லாமல் இடையூறு ஏற்படுகிறது.
- வசந்தி, உடுமலை.
விதிமுறை மீறல்
உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் விதிமுறைகளை மீறி பார்க் செய்யப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுகிறது. பஸ்கள் அவ்வழியாக சென்றுவருவதற்கும் இடையூராக உள்ளது. குறிப்பாக நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன.
- ராமநாதன், உடுமலை.
ரோடு சேதம்
கிணத்துக்கடவு, இம்மிடிபாளையம் செல்லும் ரோடு கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டி செல்லவும் சிரமப்படுகின்றனர். இதை நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும்.
-- கிருஷ்ண மூர்த்தி, கோவில்பாளையம்.