/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வரி உயர்வால் மக்கள் கோபம்; ரத்து கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
சொத்து வரி உயர்வால் மக்கள் கோபம்; ரத்து கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வால் மக்கள் கோபம்; ரத்து கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வால் மக்கள் கோபம்; ரத்து கோரி இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2025 11:13 PM

கோவை; சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, இ.கம்யூ., கட்சியினர் கோவை மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி, குப்பை வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை ஆண்டுக்கு ஆறு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. வரி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும்,
ஆண்டுக்கு ஆறு சதவீதம் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், பல்வேறு திட்டங்களுக்காக தோண்டப்பட்ட ரோட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இ.கம்யூ., கோவை மாவட்ட குழுவினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமை வகித்து பேசுகையில், ''ஆண்டுக்கு ஆறு சதவீதம் வரி உயர்வு என்பது, பொது மக்களை பெருமளவு பாதிக்கும். கடும் கோபத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மோசமான ரோடுகளை மாநகராட்சி நிர்வாகம் தாமதமின்றி சீரமைக்க வேண்டும். 24 மணிநேர குடிநீர் திட்ட பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும்,'' என்றார்.
மாவட்ட செயலாளர் சிவசாமி, கவுன்சிலர்கள் சாந்தி, பிரபா உட்பட பலர் பங்கேற்றனர்.