/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ முகாமில் மக்களுக்கு சிகிச்சை
/
மருத்துவ முகாமில் மக்களுக்கு சிகிச்சை
ADDED : செப் 07, 2025 09:16 PM

நெகமம்; நெகமம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் பவன்குமார், நெகமம் பேரூராட்சி தலைவர் ஆர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சபரி கார்த்திகேயன், மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தசாமி மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
முகாமில், ரத்த அழுத்தம், எலும்பு மூட்டு சிகிச்சை, மனநலம், கண் மருத்துவம், கர்ப்ப வாய் புற்றுநோய், குழந்தைகள் நல மருத்துவம், தோல் மருத்துவம், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 1,500க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.