/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.6 கோடியில் புதுப்பொலிவு பெறும்; அண்ணாதிடல் அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
/
ரூ.6 கோடியில் புதுப்பொலிவு பெறும்; அண்ணாதிடல் அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
ரூ.6 கோடியில் புதுப்பொலிவு பெறும்; அண்ணாதிடல் அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
ரூ.6 கோடியில் புதுப்பொலிவு பெறும்; அண்ணாதிடல் அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 06, 2025 09:46 PM
வால்பாறை; வால்பாறையில், சுற்றுலா பயணியர் 'கார் பார்க்கிங்' செய்யும் வகையில், ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணாதிடல் அழகுபடுத்தப்படுகிறது.
வால்பாறை நகரில், அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லுாரி, மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. வால்பாறை நகராட்சியில், 21 வார்டுகள் இருந்தாலும் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரில் தான் அதிக அளவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில் நகராட்சிக்கு சொந்தமான அண்ணாதிடல் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த திடலில் தான் கோவில் விழா கலை நிகழ்ச்சிகள், அரசியல் கட்சியினர் நடத்தும் கட்சிக்கூட்டங்கள் நடக்கிறது.
ஆனால், இந்த திடல் கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக விரிவுபடுத்தாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் திடலை பயன்படுத்த முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.
காட்சிப்பொருளாக உள்ள அண்ணாதிடல் சமீப காலமாக, டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவருகிறது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் அண்ணாத்திடலை கட்சியினரும் பயன்படுத்த தயங்குகின்றனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தியும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், வால்பாறை நகராட்சி அண்ணாதிடல், 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'கார் பார்க்கிங்' வசதியுடன் கூடிய கலையரங்கம் அமைக்கப்படும், என, உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு அறிவித்தார். அமைச்சரின் அறிவிப்பால் வால்பாறை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், கார் பார்க்கிங் உடன் கூடிய கலையரங்கம் அமைக்கப்படவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், வால்பாறை நகரில் சுற்றுலா வாகனங்கள் பார்க்கிங் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், மழை காலத்திற்கு முன்னதாக பணியை துவங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும்' என்றனர்.

