/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று விநாயகர் சதுர்த்தி பூக்கள் வாங்க மக்கள் ஆர்வம்
/
இன்று விநாயகர் சதுர்த்தி பூக்கள் வாங்க மக்கள் ஆர்வம்
இன்று விநாயகர் சதுர்த்தி பூக்கள் வாங்க மக்கள் ஆர்வம்
இன்று விநாயகர் சதுர்த்தி பூக்கள் வாங்க மக்கள் ஆர்வம்
ADDED : ஆக 26, 2025 10:11 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி பொது இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஹிந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. தெருக்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளில் ஹிந்து அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியில், களிமண்ணில் செய்த வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. அரை அடி முதல், மூன்று அடி வரை சிலைகள் விற்பனை செய்யப்பட்டது. பூஜைக்கு தேவையான பூக்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
பூ வியாபாரிகள் கூறுகையில், 'ஒரு கிலோ சம்மங்கி - 400 ரூபாய், செவ்வந்தி - 350 ரூபாய், அரளி - 300, சின்ன மாலை - 150, பெரிய மாலை, 400 - 1,600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தாமரை மலர் ஒன்று, 40 ரூபாய், மல்லிகை பூ கிலோ, 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூக்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்,' என்றனர்.