/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு கிராம சபை கூட்டம்: பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
/
சிறப்பு கிராம சபை கூட்டம்: பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
சிறப்பு கிராம சபை கூட்டம்: பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
சிறப்பு கிராம சபை கூட்டம்: பங்கேற்க மக்களுக்கு அழைப்பு
ADDED : மார் 14, 2024 11:16 PM
அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், நான்கு ஊராட்சிகளில், சமூகத் தணிக்கை நேற்று நிறைவடைந்தது. இன்று (15ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளிலும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெற்றுள்ளனவா என ஒவ்வொரு ஆண்டும், வெளி தணிக்கையாளர்கள் வாயிலாக அளவீடு செய்யும் பணி நடக்கிறது. பசூர், பொகலூர், வடக்கலூர், பிள்ளையப்பம்பாளையம், ஆகிய நான்கு ஊராட்சிகளில், 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2023 மார்ச் 31ம் தேதி வரை செய்யப்பட்ட பணிகள் குறித்து வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் தணிக்கையாளர்கள் கடந்த 11ம் தேதி சமூக தணிக்கை செய்யும் பணியை துவக்கினர்.
இத்திட்டத்தில் செய்யப்பட்ட வேலைகளை அளவீடு செய்தனர். சொத்துக்களை ஆய்வு செய்தனர். தொழிலாளிகளுக்கு சம்பளம் ஆவணங்களில் உள்ளபடி வழங்கப்பட்டுள்ளதா என வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை பரிசோதித்தனர்.
இதில் கண்டறியப்பட்ட குறைகள் குறித்த சமூக தணிக்கை அறிக்கை இன்று (15ம் தேதி) நான்கு ஊராட்சிகளிலும், காலை 11:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் வாசிக்கப்படும்.சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஊராட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

